Saturday, October 08, 2005

தமீழிழ பெண்கள் எழுச்சி நாள்

தமிழீழ போராட்ட வரலாற்றிலே முதன் முதல் களப்பலியான பெண்போராளியான 2ம் லெப்.மாலதியின் நினைவுதினமே தமீழிழ பெண்கள் எழுச்சி நாளாக நினைவு கூரப்பட்டுவருகிறது

1984 முதல் பெண்கள் ஆயுத போராட்டதிற்குள் இணைத்துக் கொண்டாலும், முதன் முதல் ஆயுதம் தாங்கிய பெண்போராளிகள் மக்கள முன் தோன்றியது 1987 இல் யாழ்மாவட்டத் தளபதியாக இருந்து மரணமடைந்த லெப்.கேணல்.ராதாவின் இறுதிநிகழ்வின் போதேயாகும். ஆரம்பத்தில் பெண்போராளிகள் ஆண்போராளித் தளபதிகளின் கீழ் செயற்பட்டாலும், 90களின் பிற்பகுதியில் தனித்துவமாக செயற்படும் வகையில் பெண்கள் படையணி புலிகளால் கட்டியெழுப்பப்பட்டதுபெண்போராளிகள் புலிகளின் சகல விதமான கட்டமைப்புக்குள்ளும் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் இராணுவ படையணியாக மட்டுமல்லாது, தொழினுட்பத்துறை, பொறியியல்துறை, மருத்துவம், கடற்படை, அரசியல், நிர்வாகக்கட்டமைப்பிலும் ஆண்போராளிகளுக்கு நிகராகவே உள்ளனர்.

தமிழீழ போராட்ட வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத சக்தியாக பெண்போராளிகள் வளர்ந்துள்ளனர். அவர்களைகண்டு இலங்கை இராணுவத்தினர் எப்போதும் அச்சமடைவதுண்டு. 1987 ஒக்டோபர் 10 , இந்திய படைகளுடன் விடுதலைப்புலிகள் மோதலை தொடங்கிய நாள் அன்று கோப்பாயில் இந்திய படைகளுடன் இடம் பெற்ற மோதலின் கொல்லப்பட்டவரே 2ம் லெப்.மாலதி ஆவார்.அவரின் நினைவுதினமேதமீழிழ பெண்கள் எழுச்சி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. இதுவரையில் 3000 பெண்போராளிகள் கடலிலும்,தரையிலும் தம்முயிரை ஆகுதியாக்கியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.